சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அவரின் மனைவி ராதிகாவும், மகள் வரலட்சுமியும் ட்விட்டரில் தெரிவித்தார்கள்.. இந்நிலையில் தன் உடல்நலம் குறித்து சரத்குமாரே பதிவு செய்திருக்கிறார்.

கடவுளின் அருளாலும், ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவக் குழுவின் ஆதரவு, குடும்பத்தார், நண்பர்கள், நலம் விரும்பிகள், திரைத்துரையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள், சமகவை சேர்ந்த என் சகோதர, சகோதரிகளின் பிரார்த்தனையாலும் நான் குணமாகி வருகிறேன். விரைவில் நான் பழையபடி வேலையை துவங்கிவிடுவேன்.

தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் விஜயபாஸ்கர், அரசியல் கட்சி தலைவர்கள், மீடியாவின் அன்புக்கும், அக்கறைக்கும் என் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.