சென்னை: தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 2நாள் மழைக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை மற்றும் வறண்ட வானிலை காணப்படும் என்று அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பல பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பழவிடுதி 5 செ.மீ., பாபநாசம், வேப்பந்தட்டை, சோலையார், வைகை அணை தலா 3 செ.மீ., ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.