கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

சிருவின் மரணத்தின் போது அவரது மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். கடந்த அக்டோபர் மாதம் அழகான ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.

இந்நிலையில் மேக்னா ராஜ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், ” என்னுடைய அப்பா, அம்மா, நான் மற்றும் ஜூனியர் சிரு ஆகியோருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். ஜூனியர் சிருவும் நலமாக இருக்கிறார். குடும்பமாக நாங்கள் கொரோனாவுக்கு எதிராக போராடி வெற்றியுடன் திரும்புவோம்,” என தெரிவித்து இருக்கிறார்.

https://www.instagram.com/p/CIiHC4MnYkF/