கொல்கத்தா: மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா மூச்சு திணறல் காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில்  2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. 76 வயதான அவர் மூப்பு காரணமாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தார்.

இந் நிலையில், தற்போது மூச்சுத் திணறல் காரணமாக கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.