
துபாய்: டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில், இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.
விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இவர் 251 ரன்களை அடித்ததன் மூலம், இந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளார். இவர், மொத்தம் 886 புள்ளிகள் பெற்று, இரண்டாமிடத்தை இந்தியக் கேப்டன் விராத் கோலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முதலிடத்தில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் நீடிக்கிறார். இந்திய வீரர் புஜாரா, 7வது இடத்தில் 766 புள்ளிகளுடன் இருக்கிறார். அதேசமயம், ரஹானே 11 இடத்திற்கும், மயங்க் அகர்வால் 12வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் போட்டி பவுலர்களுக்கான தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்தின் நீல் வாக்னர் 849 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் நீடிக்கின்றனர்.
[youtube-feed feed=1]