எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.

ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் லாபம் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது. தேதிகள் குறித்த விவரம் தெரியவில்லை. முதலில் திரையரங்கில் வெளியாகி அதன் பின் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.