வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட டேனியலுடன் சிம்புவின் சூப்பர் கூல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி லைக்ஸ் குவித்து வருகிறது. இன்று முதல் படப்பிடிப்பில் இணைவது குறித்து நடிகர் டேனியலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.