ஆந்திராவில் பிறந்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, மலையாளத்தில் கோலோச்சிய நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு அவர் பெயரிலேயே சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ஷகீலா வேடத்தில் இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ள இந்த படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று தியேட்டர்களீல் ரிலீஸ் ஆகிறது.

இந்தியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ‘தென் இந்திய சூப்பர்ஸ்டார்’ வேடத்தில் நடிகர் பங்கஜ் திரிபாதி நடிப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷகீலா படத்தில், நடிகராக வரும் பங்கஜ் திரிபாதியின் முதல் தோற்றம் நேற்று வெளியிடப்பட்டது.

“ஷகீலா என்ற நடிகையின் கதையில் சினிமா நடிகராகவே நடித்திருப்பது திரில் அனுபவம், ஒரு படத்திலாவது சினிமா நடிகர் கேரக்டரில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன், ஷகீலா படம் மூலம் அந்த ஆசை நிறைவேறியுள்ளது” என தெரிவித்துள்ளார், பங்கஜ்.

எந்த நடிகரின் கேரக்டரை பங்கஜ் திரிபாதி பிரதிபலித்துள்ளார் என்பது படம் வெளியான பிறகே தெரியவரும்.

– பா. பாரதி