ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. இந்த திரைப்படம் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராமராக பிரபாஸ் நடிக்க, ராவணனாக சைஃப் அலி கான் நடிக்கவுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த சைஃப் அலி கான் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ராவணனின் நல்ல பக்கத்தை காட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் கடம் தனது ட்விட்டர் பக்கத்தில் சைஃப் அலி கானை கடுமையாக சாடியுள்ளார். சீதையை ராவணன் கடத்தியது நியாயப்படுத்தப்படுவது போல தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தனது கருத்துக்கு சைஃப் அலி கான் மன்னிப்பு கோரியுள்ளார்.