கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படம் ‘சக்தி’ என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

OTT தளங்களிலும் இந்த படம் வெளியானது.சில சர்ச்சைகள் தொடர்பாக படம் OTT-யில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் பிரச்சனைகள் சுமூகமாக முடிக்கப்பட்ட பின் இந்த படம் மீண்டும் ஒளிபரப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் மூடியிருந்த திரையரங்குகள் பல ஊர்களில் திறக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து சில படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் தெலுங்கு டப்பிங் படமான சக்தி படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது .