ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியின்போது, திறக்கப்படும் சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் வழிபாட்டுத் தலங்களில் கூட தமிழகஅரசு தடை விதித்துள்ளது. அதன்படி கோவில் நிகழ்ச்சிகளில் மக்கள் கூடுதவற்கு தடை தொடருகிறது. அதன்படி, வைகுண்ட ஏகாதசி திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
நூற்றியெட்டு வைணவத் தலங்களில் முதன்மையானது பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படுகிற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், . இங்கு மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 14ம் தேதி திரு நெடுந்தாண்டகம் என்கிற நிகழ்வுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் என்கிற பரமபதவாசல் திறப்பு வரும் டிசம்பர் 25ம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து உட்பட லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
இந்த நிலையில், வைகுண்டஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு தொடர்பாக, முன்னேற்பாடு & பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் மற்ற நேரங்களில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வரும் 24ம் தேதி மாலை முதல் 25ம் தேதி காலை 8 மணி வரை (25ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு) ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. காலை 8 மணிக்கு பிறகு ஆன் லைனில் பதிவு செய்து வரும் பக்தர்கள் அரசு வழிகாட்டுதலின்படி தரிசனம் அனுமதி வழங்கப்படும்
.பக்தர்கள் முகக் கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றவும் வயதானவர்கள், குழந்தைகள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வருகைமைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆங்கில ஆண்டு கணக்கின்படி நடப்பாண்டில் ( 2020) ஜனவரி 5ம் தேதியும் வரும் டிசம்பர் 25ம் தேதியும் என ஒரே ஆண்டில் இருமுறை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.