சென்னை
இந்த மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலையை மாற்றி வருகின்றன. அவ்வகையில் டிசம்பர் மாதத்துக்கான விலை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாகச் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாகக் குறைந்தது. ஆயினும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்காத நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் சற்று குறைக்கப்பட்டது. ஜூன், ஜூலை மாதங்களில் விலை அதிகரிக்கப்பட்டு அதன் பிறகு 2 மாதங்களாக விலை உயரவில்லை.
இந்த மாதம் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய விலையான ரூ.610 தற்போது ரூ.660 ஆக உயர்ந்துள்ளது. இதைப் போல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இதன் விலை ரூ.56.50 உயர்ந்து ரூ.1410.10 ஆகி உள்ளது.