இந்த தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. பின்னர், சிபிஐ வலியுறுத்தியதின் பேரில், ஜூலை 30ந்தேதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று முடக்கம் காரணமாக விசாரணை நடத்தப்படாமல் முடங்கியது.. இதையடுத்து, வழக்கை விரைவாக விசாரிக்க கோரி, சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து. வழக்கு தினசரி பிற்பகல் 2.30 மணிக்கு தினசரி விசாரணை தொடங்கும் என டில்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி சமீபத்தில் விசாரணை தொடங்கியது. இதையடுத்து, ராஜா, கனிமொழி தரப்பில், சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீட்டை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, ராஜா, கனிமொழியின் மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும், அடுத்த விசாரணை டிசம்பர் 1ந்தேதி நடைபெறும் என்றும் உத்தரவிட்டார். நீதிபதி பிரிஜேஷ் சேத்தி நவம்பர் 30 ஆம் தேதி ஓய்வு பெறுவதால் 2 ஜி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடுகள் மற்றொரு நீதிபதி முன் பட்டியலிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.