வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைபெற்றுள்ளது, இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் வருகின்ற 25-ம் தேதி கரைக்கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,புதுச்சேரியின் கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 550 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.சென்னைக்கு தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.இது ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.வங்கக் கடலில் உருவாகி இருக்கும் நிவர் தீவிர புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் -மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய மின்கம்பங்களை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகளவு மழை பெய்யக் கூடும் என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது மின் கம்பங்கள் சேதம் அடைந்தால் அதை சீரமைக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன, 100 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசினாலும் சமாளிக்க மின்சாரத் துறை தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.