வாஷிங்டன்: தனது இளம்பிராந்தியமான சிறுவயதில் இந்தியாவின் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன். இந்தியாவைப் பற்றிய சிறந்த கற்பனை இருந்தது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, “எ பிராமிஸ்ட் லாண்ட்” என்ற தலைப்பில் தனது சுயசரிதை புத்தகம் எழுதி உள்ளார். இரு பகுதிகளாக உருவாக்கப்பட்டு, 768 பக்கங்கள் கொண்ட முதல் பகுதி வெளியிடப்படடுள்ளது. அதில், ஒபாமாவின் இளமைக்கால வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, அரசியல் நிகழ்வுகள், அதிபராக இருந்தபோது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள், சந்தித்த உலகத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பன்முகத்தகவல்களை தனது நினைவுக்குறிப்பாக தொகுத்துள்ளார்.
இந்த நூலில் ஒபாமா தனது இளமைக் காலம் குறித்து பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதில் இந்தியா குறித்து ஒபாமா குறிப்பிடுகையில் “ உலகின் மக்கள் தொகையில் ஆறில் பகுதி மக்கள் வாழும் நாடு, 2 ஆயிரத்துக்கும் மேலான தனித்துவமான இனக்குழுக்கள், 700க்கும் மேற்பட்ட பேசும் மொழிகள் இருக்கும் நாடு என்று தெரிவித்து உள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இந்தியாவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னர், தான் ஒருபோதும் இந்தியாவுக்குச் சென்றதில்லை என்றாலும், இந்திய நாட்டைப் பற்றிய மோகம் தனது சிறுவயது காலங்களில் மனதில் இருந்தது. இதற்கு காரணம், தான் சிறுவயதில் கேட்ட, இந்தியாவின் இந்து காவியங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதங்களினால் கேட்டு வளர்ந்தேன், அதன் காரணமாக, தனக்கு இந்தியா மீது ஒரு சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதாகவும், மேலும், மகாத்மா காந்தியின் நடவடிக்கை காரணமாக தனது மனதில் இந்தியா ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருந்தது என்றும் தெரிவித்து உள்ளார்.
தனக்கு கிழக்கு நாடுகளின் மதங்களை மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டதுடன், என்னுடன் இளமை காலத்தில் இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்தார்கள், பல நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள்தான் எனக்கு பருப்பு, கீமா சமையல் செய்வதைப் பற்றி கற்றுக் கொடுத்தார்கள். இந்தி திரைப்படங்களை பார்க்கவும் அறிமுகப்படுத்தினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பதட்டமானவர்! முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தகவல்