சிறந்த இயக்குனராய் திகழும் செல்வராகவன், தற்போது நடிகராகவும் களமிறங்கவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் செல்வராகவன்.

செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கவிருக்கிறார்.

யாமினி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம் செய்யும் இந்த படத்திற்கு நாகூரான் எடிட்டிங் செய்யவிருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்தது. ஆயுதங்களுடன் அமர்ந்திருக்கின்றனர் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன். இந்த மோஸ்ட் வான்டட் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

போஸ்டரில் இருவரின் முகத்தில் ரத்த காயங்கள் உள்ளது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக இருக்குமா என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.