ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய வீரர்கள் உள்பட 6 பேர் பலியான நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தளனர். இதில், பாகிஸ்தான் வீரர்கள் 8பேர் வரை பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது. அவர்களை ஒடுக்க இந்திய வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதே நேரத்தில் உரி மற்றும் குரேஸ் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகின்றன. இந்த தாக்குதலை தொடர்ந்து ஜம்முகாஷ்மீரின் எல்லை பகுதியில் பதற்றம் நீடித்துவருகிறது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் நிலைகளின் மீது இந்திய ராணுவம் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ ஆயுத கிடங்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த வீரர்களில் பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ வீரர்கள் இருவரும் அடங்குவர்.