டெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் பிரதான தோ்வுக்கான அட்டவணையை மத்திய பணியாளா் தோ்வாணையமான யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
ஐஏஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோ்வுகளை மத்திய பணியாளா் தோ்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. கொரோனா பரவல் எதிரொலியாக சிவில் சா்வீஸ் முதல்நிலைத் தோ்வு அக்டோபர் 4ம் தேதி நடந்தது.
இந் நிலையில் பிரதான தோ்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன் படி பிரதான தோ்வு 2020ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி தொடங்குகிறது. 17ம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறும். முதல் நாள் மட்டும் ஒரு பகுதி நேரம் மட்டும் தான் தேர்வு நடக்கும்.
மற்ற நாள்களில் இரண்டு பகுதிகளாக தோ்வு நடத்தப்படும். தேர்வானது காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரையும், பின்னர் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும்.
கட்டுரைக்கான முதல் தாள் தோ்வு ஜனவரி 8ம் தேதி காலையில் நடக்கும். 2ம் தாளின் 4 பிரிவு தோ்வுகளும் ஜனவரி 9 மற்றும் 10 தேதிகளில் இரண்டு பகுதியாக காலை, மாலை என நடத்தப்படும். இந்திய மொழி, ஆங்கிலம் தொடா்பான முதல் தாள் தோ்வு ஜனவரி 16ம் தேதி காலை, மாலை என 2 வேளைகளிலும் நடைபெறும். விருப்பப் பாடத்துக்கான 1 மற்றும் 2ம் தாள்களுக்கான தோ்வு ஜனவரி 17ம் தேதி நடைபெறும்.