சென்னை: தமிழகத்தில்,  அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்குவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் இலவச நீட் பயிற்சி மையங்களில் சேர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இணைய வழியில் நடக்கும் இலவச நீட் பயிற்சி வகுப்பில் பிளஸ் 1 பதிவு எண்ணை பதிவிட்டு கலந்து கொள்ளலாம். 2021 நீட் தேர்வு நடைபெறும் முந்தைய வாரம் வரை மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

நடப்பாண்டில், கோவையைச் சேர்ந்த தனியார் அமைப்பு 2021ஆம் ஆண்டிற்கும் பயிற்சி அளிக்க உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக இணையவழி நீட் பயிற்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும், விருப்பம் உள்ள மாணவர்கள் https://t.co/eXCcQlp0sD என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும்  ஏற்கனவே தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது..  அதன்படி 4 மணி நேரம் வகுப்பு மற்றும் 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இன்று முதல் ஆன்லைனில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் https://neet.e-box.co.in என்ற இணையதளத்தில் 11-ம் வகுப்பு பதிவு எண், பிறந்த தேதியை உள்ளிட்டு Log In செய்து, பங்கேற்கலாம் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு தேதிக்கு முந்தைய வாரம் வரை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும், ஆன்லைனிலேயே ஒவ்வொரு வார இறுதியிலும், அந்த வாரத்துக்கான பாடங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.