மதுரை:
இந்தியாவின் தென் மூலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் விமான நிலையம் ஏன் அமைக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுபியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் . அதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஒரு சுற்றுலாத் தலமாகும். இங்கு குலசேகர பாண்டிய மன்னன் கட்டிய மீனாட்சி அம்மன் கோவில், பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில், செட்டிநாடு அரண்மனை, உலகப் புகழ்பெற்ற அறிவியல் தொழில்நுட்ப மையமான சிக்ரி, போன்றவை அமைந்துள்ளன .
இங்கு ஏராளமான சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள் உலகெங்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஏற்கனவே மூன்றாம் உலகப் போருக்கு முன்பாக இப்பகுதியில் உள்ள செட்டிநாடு பகுதியில் ஒரு விமான நிலையம் இருந்துள்ளது. யாழ் பலாலி விமான நிலையம் எதிவரும் 17ஆம் திகதி திறப்பு இப்பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் விமான ஓடுதளம் மற்றும் அதற்குரிய, வசதிகளும் உள்ளன. இவற்றை மேம்படுத்தி ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும். மத்திய அரசு உதான் திட்டத்தின் கீழ் 13 இடங்களில் விமான நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் விமான நிலையம் இருந்த செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடுக்கடுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கேள்விகளை எழுப்பியது. அதாவது சிவகங்கை செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்க கோரிய இந்த வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், இந்தியாவின் தென் மூலையில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பது குறித்து மத்திய மாநில அரசுகள் இன்னும் ஏன் ஆலோசனை செய்யவில்லை எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் விரைவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இது குறித்து ஆலோசனை செய்யுமாறும் பதிலளிக்குமாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel