இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கோவை, சேலம் மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. தற்போதைய நிலையில், மாநிலம் முழுவதும் தற்போது 24,886 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போதைய நிலையில், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 19,403 பேராக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4087 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 83,464 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 35 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,053 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று புதிதாக 756 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 148 பேர், திருவள்ளூர் 146, கோவையில் 251, ஈரோடு 124, சேலம் மாவட்டத்தில் 170 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த 6 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,98,487 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 7,628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3626 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,87,233 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், எசென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
அண்ணா நகர் – 601 பேர்
தேனாம்பேட்டை – 505 பேர்
தண்டையார்பேட்டை – 301 பேர்
ராயபுரம் – 412 பேர்
அடையாறு- 477 பேர்
திரு.வி.க. நகர்- 502 பேர்
வளசரவாக்கம்- 283 பேர்
அம்பத்தூர்- 375 பேர்
திருவொற்றியூர்- 119 பேர்
மாதவரம்- 177 பேர்
ஆலந்தூர்- 242 பேர்
பெருங்குடி- 265 பேர்
சோழிங்கநல்லூர்- 111 பேர்
மணலியில் 118 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.