சென்னை
தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் :
தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, நேற்று 2516 என்று இருந்த நிலையில் இன்று 2652 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் மொத்தம் 7,19,403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 35 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, இதுவரை 11,053 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 6,83,464 ஆக உயர்ந்துள்ளது, இன்று ஒரே நாளில் 4,087 குணமடைந்ததைத் தொடர்ந்து, தற்போது 24,886 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் இன்று 756 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இது நேற்றைய பாதிப்பில் இருந்து 10 சதவீதம் கூடுதலாக உள்ளது, நேற்று சென்னையில் பாதிப்பு 688 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று 71,147 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த எண்ணிக்கை 73,862 ஆக இருந்தது, இது நேற்றை விட 3.8 சதவீதம் கூடுதலாகும்.
கோவையில் 251, சேலத்தில் 170 பேருக்கு இன்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
Patrikai.com official YouTube Channel