சென்னை: வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால் எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில், துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் அதிகரிக்க, இன்று அவருக்கு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் துரைக்கண்ணு இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.