சென்னை
வரும் ஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் முன்பு போல 5 நாட்கள் பணி நடைபெறும் எனத் தமிழக தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் முதல் அறிவிக்கப்பட்டிருந்த தேசிய ஊரடங்கில் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அவ்வகையில் மே மாதம் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் வாரத்துக்கு ஆறு நாட்கள் இயங்கி வந்தன.
செப்டம்பர் மாதம் முதல் மேலும் தளர்வு அறிவிக்கப்பட்டு 100% ஊழியர்கள் பணி புரிய உத்தரவிடப்பட்டது.
இவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு வாரத்துக்கு 6 நாட்கள் பணி புரிந்தனர்.
தமிழக தலைமை செயலர் சண்முகம் ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதில் காணப்படுவதாவது
“வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் வாரத்தில் 5 நாட்கள் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும்
ஆகவே 100% அரசு ஊழியர்களும் வாரத்தில் 5 நாட்கள் பணி புரிய வேண்டும் “
என அறிவிக்கப்பட்டுள்ளது.