கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கத் தயங்க மாட்டோம் என அமித்ஷா கூறியது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜக்தீப் தங்கர் மற்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இடையே நாளுக்கு நாள் ப்னிப்போர் அதிகரித்து வருகிறது.  மத்திய அரசின் ஊதுகுழலாக ஆளுநர் ஜக்தீப் தங்கர் செயல்பட்டு வருவதாக முதல்வர் மம்தா குற்றம் சாட்டி வருகிறார்  இதே கருத்தை மாநில அமைச்ச்ர்களும், ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் தலைவ்ர்க்ளும் தெரிவிக்கின்றனர்.

அதே வேளையில் மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாகத் தெரிவித்து வரும ஆளுநர் தனது கருத்தை மத்திய அரசுக்கு அறிக்கையாக அனுப்பி உள்ளார்.  இதையொட்டி திருணாமுல் காங்கிரஸ் அரசு நீக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக்கப்படும் என கூறப்படுகிறது.  இதனால் அங்கு தேர்தல் வரை ஆட்சி நீடிக்குமா என ஐயம் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தற்போது மேற்கு வங்கத்தில் சடம் ஒழுங்கு சீர் குலைந்து காணப்படுகிறது  இதே நிலை தொடரும் எனத் தோன்றுகிறது.  மாநில அரசு சட்டம் ஒழுங்கு நிலையைச் சீர் செய்யாவிட்டால் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்கத் தயங்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இது மேற்கு வங்கத்தில் சர்ச்சை உண்டாகி இருக்கிறது.   மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசு மீதான தாக்குதலை அதிகமாக்கி உள்ளார்.  அதே வேளையில் பாஜகவினர் அமித்ஷாவின் கருத்தை வரவேற்றுள்ளனர். திருணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு குறித்து ஏராளமான குற்றச்சாட்டுகளில் உள்ள உத்தரப்பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்ப்டுத்த்ட்டும் என தெரிவித்துள்ளனர்.