காஷ்மீர் மாநிலத்தக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370-வது அரசியல் சாசன சட்டம் நீக்கப்பட்டு, அந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஓராண்டை கடந்துவிட்ட நிலையில், சமீபத்தில் வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் முதல்வர மெகபூபா முக்தி, மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெற போராடுவோம் என கூறிய நிலையில், அவருக்கு ஆதரவாக ப.சிதம்பரமும் குரல் கொடுத்துள்ளார்.
டெல்லி பறித்ததை திரும்ப பெற போராட்டத்தை நாம் தொடர வேண்டும்! மெகபூபா முக்தி
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370-வது அரசியல் சாசன சட்டத்தை சட்டத்திற்கு புறம்பாக நீக்கிய முடிவை, மோடி அரசு ரத்து செய்ய வேண்டும். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நிலை நிறுத்தவும், ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும். மக்களின் உரிமைகள் நிலை நிறுத்த, ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தை சார்ந்த பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்பு போரை முன்னெடுத்து இருப்பது நல்ல முன்னேற்றம். இந்திய மக்கள் அனைவராலும் இது வரவேற்கப்பட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.