சென்னை: மாநிலத் தலைநகர் சென்னையில், கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,79,424 ஆக உயர்ந்துள்ளது. மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மாநகராட்சி, பொதுமக்கள் முக்கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில், நேற்று 1288 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 1,79,424 ஆக உயர்ந்துள்ளது, நேற்று மட்டும் 1128 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை – 1,62,424 (90.62%) பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 3,373 (1.87%) பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில் 13,446 (7.49%) பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போதைய நிலையில், 13,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோடம்பாக்கம் – 1,332 பேர், அண்ணா நகர் – 1,382 பேர், தேனாம்பேட்டை – 1,336 பேர், தண்டையார்பேட்டை – 931 பேர், ராயபுரம் – 982 பேர், அடையாறு- 1,092 பேர், திரு.வி.க. நகர்- 1,215 பேர், வளசரவாக்கம்- 826 பேர், அம்பத்தூர்- 1,000 பேர், திருவொற்றியூர்- 400 பேர், மாதவரம்- 565 பேர், ஆலந்தூர்- 706 பேர், பெருங்குடி- 585 பேர், சோழிங்கநல்லூர்- 314 பேர், மணலில் 252 பேர்.