சிட்னி: ஆஸ்திரேலிய ஆண்கள் அணியைப் போன்று, ஆஸ்திரேலிய பெண்கள் அணியும், தொடர்ச்சியான ஒருநாள் வெற்றிகள் என்ற வகையில் உலக சாதனைப் படைத்துள்ளது.
தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய பெண்கள் அணி.
இதன்மூலம், அந்த அணி தொடர்ச்சியாக 21 சர்வதேச ஒருநாள் போட்டிகளை வென்றுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு, ரிக்கிப் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி தொடர்ச்சியாக 21 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.
தற்போது அந்த சாதனையை சமன் செய்துள்ளது அதே ஆஸ்திரேலியாவின் பெண்கள் அணி என்பது குறிப்பிடத்தக்கது.