நாட்டில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில், இந்த கொரோனா காலத்தில் குழந்தை பிறப்பை ஊக்குவித்துள்ள சிங்கப்பூர் அரசு, தற்போதைய காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும் வகையில் பேபி போனஸ் என்ற திட்டத்தை அறிவித்து உள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிஇழப்பு காரணமாக, குழந்தை பிறப்பை தள்ளிப்போட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அரசு, குழந்தை பெற விரும்பும் தம்பதிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 2018ல் சிங்கப்பூரின் மக்கள் தொகை கடந்த 8 வருடத்தில் மிக குறைவாக இருந்தது. இதையடுத்து மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை சிங்கப்பூர் அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தற்போது, கொரோனா வைரஸ் தொற்றுநோய்கள் காரணமாக நாட்டு மக்கள் குழந்தை பிறப்பை ஒத்தி வைக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நாட்டில் குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக சிங்கப்பூர் தம்பதிகளுக்கு ‘குழந்தை போனஸ்’ என்ற திட்டப்படி நிதி உதவி வழங்கப்படும் என்றும், அறிவித்து உள்ளது. இது கொரோனா பேரழிவு காரணமாக பொருளாதார சுமையை எதிர்கொண்டுள்ள தம்பதிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கூறிய சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் , கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமை மற்றும் வேலை நீக்கம் காரணமாக ஒரு குடும்பத்தைத் தொடங்க தாமதிக்க வேண்டிய ஆர்வமுள்ள பெற்றோருக்கு ஆதரவளிப்பதாகும். சில பெற்றோர்கள் குழந்தைகள் பிறப்பு திட்டங்களை ஒத்திவைக்க கொரோனா காரணமாகிவிட்டது என்ற தகவல் எங்களுக்கு வந்துள்ளது. இ பல புதுமண தம்பதியினர் குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டுள்ளனர். கர்ப்பிணியானால் பிரசவத்திற்கு கூட பணம் இல்லாத நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பண நெருக்கடி காரணமாக குழந்தை பிறப்பை தள்ளிப்போட முடிவு செய்துள்ள தம்பதிகளுக்கு நிதி உதவி அளிக்க சிங்கப்பூர் அரசு முன்வந்துள்ளது. அதனால், “இந்த காலகட்டத்தில் செலவினங்களுக்கு உதவ, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு கூடுதல் ஆதரவை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் என்று தெரிவித்து உள்னார்.
இந்த ‘பேபி போனஸ்’ என்ற திட்டப்படி குழந்தை பெற தயாராகும் தம்பதிகளுக்கு 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் வரை பணம் கிடைக்கும். குழந்தை பெற விரும்பும் தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும் வரை உள்ள செலவை ஒரே தவணையில் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
தற்போது, சிங்கப்பூரில் தகுதி வாய்ந்த தம்பதிகள் தங்கள் குடும்பங்களை விரிவுபடுத்துவதற்காக, 3 7,330 (ரூ .5 லட்சத்துக்கு மேல்) சலுகைகளைப் பெறுகின்றனர். இந்த நடவடிக்கைகளின் மூலம், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முடக்கும் பொருளாதார விளைவுகளால் உயர்த்தப்பட்ட மக்கள்தொகை நெருக்கடியைத் தவிர்க்கும் என அரசாங்கம் நம்புகிறது.
2018 ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு எட்டு ஆண்டு குறைவான 1.14 பிறப்புகளைத் தொட்டது மற்றும் கடந்த ஆண்டு மாறாமல் இருந்தது என்று ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது. இது தற்போதைய கொரோனா தொற்றுநோய்களின் போது மேலும் மோசமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சிங்கப்பூர் அரசு இந்த புதிய நிதி உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.