ஜெனீவா: 2020ம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

உலக நாடுகளை இன்னமும் அச்சுறுத்தி வரும் கொரோனாவை ஒழிக்கும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஸ்புட்னிக் வி என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்து உள்ளது.
அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி உள்ளன. இந்தியாவும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந் நிலையில், 2020ம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைவர் டெட்ரோஸ் அதானம் கூறியதாவது:
தடுப்பூசிகள் தேவைப்படும் என்ற நிலைமை இப்போது உள்ளது. ஆகவே இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.