டில்லி
இந்த 2018-19 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு அளிக்கக் கடைசி தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு ஜூலை 31க்குள் அளிக்கப்படவேண்டும் என்பது விதி ஆகும்.
இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
தற்போதைய நீட்டிப்பின்படி இன்றுடன் வருமான வரி கணக்கு அளிக்கக் கடைசி தேதி முடிவடைகிறது.
ஆனால் கொரோனா பரவுதல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
எனவே வருமான வரி கணக்கு அளிக்கும் காலக்கெடு வரும் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel