டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
இதுதவிர நாடு முழுவதும் காலியாக உள்ள 1பாராளுமன்ற தொகுதி உள்பட 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தேர்தல் நவம்பர் 3ந்தேதி மற்றும் நவம்பர் 7ந்தேதி என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள வால்மிகி நகர் பாராளுமன்ற தொகுதி உள்பட 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சத்திஸ்கர் மாநிலத்தில் 1 தொகுதி, குஜராத் மாநிலத்தில் 8 தொகுதி, அரியானா மாநிலத்தில் 1 தொகுதி, ஜார்கண்ட் மாநிலத்தில் 2 தொகுதி, கர்நாடக மாநிலத்தல் 2 தொகுதி, மத்திய பிரதேச மாநிலத்தில் 2 தொகுதி, மணிப்பூர் மாநிலத்தில் 2 தொகுதி, நாகலாந்தில் 2 தொகுதி, ஒடிசாவில் 2 தொகுதி, தெலுங்கானா மாநிலத்தில் 1 தொகுதி, உத்தரபிரதேச மாநிலத்தில் 7 தொகுதி என மொத்தம் 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூர் மாநில சட்டமன்ற தொகுதி தவிர 54 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பீகார் மாநில வால்மிகி நாடாளுமன்ற தொகுதி மற்றும் மணிப்பூர் மாநில 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 7ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள 2 சட்டமன்ற தொகுதி ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அத்துடன், கேரள மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டமன்ற தொகுதி, அஸ்ஸாம் 1 தொகுதி, மேற்கு வங்காளத்தில் 1 தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளும், கமல்நாத் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, பின்னர் பாஜகவில் ஐக்கியமானதால் பதவி இழந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியாகும். கடந்த மார்ச் மாதம்
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியின்போது, துணைமுதல்வர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியசிந்தியா பாஜகவில் இணைந்தார். முன்னதாக, அவரது ஆதரவாளர்களான 22 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினமா செய்தனர். அவர்களும் பாஜகவில் இணைந்தனர். இது தொடர்பாக காலியான சட்டமன்ற தொகுதிகள் உள்பட காலியாக உள்ள 27 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம், கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை என்ற அறிவிப்பு…