2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள அக்‌ஷர்தம் கோயிலில் துப்பாக்கி ஏந்திய இருவர் அங்கிருந்த பக்தர்களைச் சரமாரியாகச் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். 80க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் தற்போது திரைப்படமாக உருவாகிறது.

இப்படத்துக்கு ‘ஸ்டேட் ஆஃப் சீஜ்: அக்‌ஷர்தம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.