சென்னை: கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்பு வெண்டும் என ஆசைப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.

இந்தநிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,

தே.மு.தி.க. தலைவரும் அருமை நண்பருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன்.
அவர் விரைவில் முழுநலம் பெற்று பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.