
ஷார்ஜா: ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 216 ரன்கள் இலக்கை விரட்டிய சென்னை அணி, 20 ஓவர்களில் 200 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்களில் தோல்வியடைந்தது.
சென்னை வீரர் டூ பிளசிஸ் 37 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன், 72 ரன்கள் விளாசினார்.
சாம் கர்ரன் 6 பந்துகளில் 17 ரன்களையும், கேதார் ஜாதவ் 16 பந்துகளில் 22 ரன்களையும் அடித்தனர். அதேசமயம், களமிறங்கியது முதல் அதிரடி காட்டாமல் இருந்த தோனி, சாத்தியமில்லாத கடைசி நேரத்தில் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.
இன்னும் கூடுதலாக 3 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருந்தால் சென்னை அணி வென்றிருக்கும். முரளி விஜய், அடுத்தப் போட்டியிலாவது உருப்படியாக ஆட முயல வேண்டுமென்ற குரல்கள் எழுந்துள்ளன.
ராஜஸ்தான் அணியின் ராகுல் டிவேடியா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டாம் கர்ரன் அதிகபட்சமாக 54 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
[youtube-feed feed=1]