சார்ஜா

நேற்று ஐபில் போட்டியில் தாம் ஏழாவதாகக் களம் இறங்கியது குறித்து தோனி விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய் அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.  இதில் நேற்றிரவு 4 ஆம் லீக் ஆட்டம் சார்ஜாவில் நடந்தது.  இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.    ஆட்ட இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் மட்டும் எடுத்து ராஜஸ்தான் அணியிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இது முதல் தோல்வி ஆகும்.   ஆட்டத்தில் தோனி 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.   போட்டியின் இறுதி ஓவரில் டாக் கரன் பந்து வீசினார்.  அப்போது தோனி ஹாட்ரிக் சிக்சர் அடித்தது ரசிகர்களை கவர்ந்தது,.

இந்த போட்டியில் 7 ஆவதாகக் களம் இறங்கிய தோனி தனது சக ஆட்டக்காரர் டூ பிளசிஸ் உடன் இணைந்து நன்கு விளையாடினார்.  அவர் டூ பிளசிஸை விளையாட விட்டு ஒத்துழைப்பு அளித்தார்.

கிரிக்கெட் விமர்சகர்கள் அவரது ஆட்டத்தைப் புகழ்ந்த  போதிலும் தோனி 7 ஆவதாக விளையாடியதை விமர்சித்துள்ளனர்   அவர் 3 அல்லது 4ஆவதாக கெய்க்வாட்டுக்கு பதிலாக விளையாடி இருந்தால் வெற்றி  பெற்றிருக்கலாம் என கூறுகின்றனர்.

இது குறித்து தோனி, “நீண்ட காலமாக நான் பேட்டில் செய்யவில்லை.  மேலும் எனக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலும் உதவிகரமாக இல்லை. நான் சாமுக்கு வாய்ப்புக்கள் வழங்க இந்த முயற்சியை மேற்கொண்டேன். சாம்சன் நன்கு பேட்டிங் செய்தார்.  எங்களுக்கு 217 ரன்கள் எடுக்க நல்ல ஆரம்பம் தேவைப்பட்டது.

முதல் இன்னிங்சை நன்கு கவனித்து இருந்தால் நீங்கள் பந்து வீச்சைப் பற்றி எளிதாக கூற  முடியும்.   நமது சுழற்பந்து வீச்சாளர்கள் செய்த தவறுகளால் எதிரணியினர் 200 ரன்களை விட அதிகம் எடுத்தனர்.  நாம் அவர்களை 200 ரன்களுக்கு கட்டுப்படுத்தி இருக்கலாம்” என விளக்கம் அளித்துள்ளார்.