ராமநாதபுரம்: வேளாண் மசோதா பற்றி ஸ்டாலின் தெரியாமல் பேசுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அவர் கொரோனா தொற்று பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆட்சியர் அலுவலகம் சென்ற அவர் ரூ.167.61 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பல திட்டங்கள் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், வேளாண் மசோதா பற்றி ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார். இந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவ்வாறு பாதிக்கக்கூடிய எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது.
எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றன. தீவிர நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது. தமிழகத்தில்தான் அதிக அளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.