‘மஹாநடி’ படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ்.
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார். இது பிரபாஸின் 21 ஆவது படம் .
தற்போது, இந்தப் படத்தில் சிங்கிதம் சீனிவாச ராவ் இணைந்துள்ளார். அவர் தான் திரைக்கதை பணியில் வழிகாட்டியாகச் செயல்படவுள்ளார்.
A long awaited dream finally comes true. We are thrilled to welcome #SingeetamSrinivasaRao Garu to our epic.
His creative superpowers will surely be a guiding force for us.#Prabhas @deepikapadukone @nagashwin7 @AshwiniDuttCh @VyjayanthiFilms pic.twitter.com/Mxvbs2s7R9— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) September 21, 2020
நேற்று சிங்கிதம் சீனிவாச ராவின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது ‘பிரபாஸ் 21’ படக்குழு.