தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் இன்னும் சில முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணிபுரியவில்லை. அதில் முக்கியமான இயக்குநர் வெற்றிமாறன்.
‘அசுரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகும் கூட விஜய் – வெற்றிமாறன் சந்திப்பு நடந்தது. ஆனால், படமாக அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.
இந்நிலையில் நேற்று ட்விட்டரில் ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்து வந்த ஜி.வி.பிரகாஷ் , “விஜய் – வெற்றிமாறன் படங்கள் நடந்தால் கண்டிப்பாக நீங்கள் இல்லாமல் நடக்காது. அது எப்போது?” என்ற கேள்விக்கு :-
“கண்டிப்பாக. அது அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு கூட்டணி. இருவருமே இணைந்து பணிபுரிய விரும்புகிறார்கள். அதற்கான நேரம்தான் இருவருக்கும் பொருந்தாமல் உள்ளது. இருவருடைய படங்களை வைத்துப் பார்த்தால் 2021 அல்லது 2022-ல் இணைய வாய்ப்புள்ளது” என பதிலளித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.