சென்னை
ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் ஆன்லைன் வகுப்புக்கள் நிறுத்தப்பட உள்ளன.
கடந்த மார்ச் முதல் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
ஆயினும் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போது தமிழக பள்ளிக் கல்வித்துறை 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில்,
“இன்று முதல் செப்டம்பர் 25 வரை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு விடுமுறை விடப்படுகிறது.
எனவே விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”
என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புக்கள் நிறுத்தப்பட உள்ளன.