Skip to content
  • Wed. Sep 16th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

கொரோனா விவகாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! சட்டமன்றத்தில் முக ஸ்டாலின் வலியுறுத்தல்

Sep 15, 2020

சென்னை: கொரோனா தொற்று  விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சட்டமன்றத்தில்  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழக சட்டப்பேரவையில் கொரோனா தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது.

”கொரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு 5 லட்சம் பேரைத் தாண்டி விட்டது. இறப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் சென்னை முதலிடம். 30 ஆயிரத்திற்கு மேல் செங்கல்பட்டு – 20 ஆயிரத்திற்கு மேல் திருவள்ளூர், கோயம்புத்தூர் என்ற பாதிப்பு பதற வைக்கிறது. 10 முதல் 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 12 ஆகவும், 5 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப் பட்ட மாவட்டங்கள் 9 ஆகவும் உள்ளன. இந்தப் பாதிப்பிற்கு இடையில்தான், ஊரடங்கைத் தளர்வு செய்திருக்கிறோம்.

தொழில், பொருளாதாரம், தனிநபர் வருமானம், தனிநபர் சுகாதாரம் அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளன. கரோனா நோய்த் தொற்று பேரிடர் காலத்திற்கு – ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாக 5000 ரூபாய் பண உதவி அளிக்க வலியுறுத்தினேன். அதைக் கொடுக்கவில்லை.

மாவட்டங்களில் உள்ள- மருத்துவமனை, ஆய்வகங்கள் வாரியாக கொரோனா சோதனை, படுக்கை கள், ஆக்சிஜன் வசதிகள், வென்டிலேட்டர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை வெளியிட வேண்டும் என்றேன். அதையும் செய்யவில்லை.

கொரோனா இறப்பு எண்ணிக்கை, சோதனை, நோய் பாதிப்பு, குணமாகி வீடு திரும்பியோர் என எதிலும், அரசு புள்ளிவிவரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதே என் குற்றச்சாட்டு. மறைக்கப்பட்ட மரணங்களைக் கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை என்னவானது என்று தெரியவில்லை.

கொரோனாவிற்கு முந்தைய நிதிநிலை அறிக்கையை மறுபரிசீலனை செய்யவில்லை. பரிந்துரை அளிக்க அமைக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் குழு அறிக்கை என்னவானது என்று தெரியவில்லை. அதுகுறித்த விளக்கத்தை நான் அறிய விரும்புகிறேன்.

கொரோனா காலப் பேரிடர் நியமனங்கள், கொள்முதல் எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிகிச்சை நிதி 2 லட்சம் ரூபாய், உயிர்த் தியாகத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- அது இதுவரை வழங்கப்பட்டிருக்கிறதா? அதுகுறித்தும் அறிந்திட நான் கடமைப்பட்டுள்ளேன்.

ஒட்டுமொத்தமாக கரோனாவைக் கையாளுவதில் இந்த அரசு படுதோல்வி அடைந்து நிற்கிறது என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பல முறை கோரிக்கை வைத்தேன். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் – அதில் ஆலோசிப்போம் என இதுகுறித்து நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். அதையும் அலட்சியப்படுத்திவிட்டீர்கள்.

இன்றைக்குக் கொரோனா மேலாண்மையிலே தோற்று ஐந்து லட்சம் பேர் பாதிப்புக்கு ஆளாகியிருக் கிறார்கள். இந்தச் சூழலில் – தமிழகத்தின் பொருளாதாரம் மேலும் படுமோசமாகும் சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே உபகரணங்கள் கொள்முதல், நியமனங்கள், மருத்துவமனை மற்றும் ஆய்வகங்கள் வாரியாக கொரோனா சோதனைகள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள், சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர், இறந்தோர், கொரோனா பேரிடருக்கு மாநில நிதி மற்றும் பேரிடர் நிதியிலிருந்து செலவழிக்கப்பட்ட தொகை, கரோனாவால் மாநிலத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு, பொருளாதார, தொழில் வீழ்ச்சி ஆகியவை குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை, இன்னும் ஒரு நாள்தான் சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் இந்த அவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Post navigation

மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது…
முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு : தமிழக அரசின் வேண்டுகோள் நிராகரிப்பு

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer