இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி 90ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள தொற்று பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 83 ஆயிரத்து 809 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 43 லட்சத்து 30 ஆயிரத்து 237 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும், 1,054 உயிரிந்துள்ளதால், இதுவரை கொரோனாவுக்கு பலியோனார் மொத்த எண்ணிக்கை 80,776 ஆக அதிகரித்து இருக்கிறது.
தற்போதைய நிலையில், தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 90 ஆயிரத்து 061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 80,776 பேர் தொற்று பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 38 லட்சத்து 59 ஆயிரத்து 400 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.