லையாளத்தில் இயக்குநர் மற்றும் நடிகராக இருக்கும் லால், தமிழில் விஷால் நடித்த ’சண்டக்கோழி ‘ படம் மூலமாக கொடூர வில்லனாக நமக்கு அறிமுகம் ஆனார்.

இப்போது அவர் ஒரே நேரத்தில் மூன்று தமிழ் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

கார்த்தி நடிக்கும் சுல்தான் , தனுஷ் நடிக்கும் கர்ணன் மற்றும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களே அவை.

இதில் கர்ணன் படத்தில் படம் முழுக்க வரும் கேரக்டர். இந்த படத்துக்காக லால், 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் வயதான போர்வீரனாக நடிக்கிறார், லால்.
இந்த படத்துக்காக அவர் குதிரை ஏற்ற பயிற்சி பெற்று வருகிறார்.

-பா.பாரதி.