Skip to content
  • Sun. Jul 12th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

அரியர் தேர்வு ரத்து எதிர்த்து வழக்கு: சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணை…

Sep 8, 2020

சென்னை: அரியர் தேர்வு ரத்து எதிர்த்து  தொடரப்பட்ட பொதுநல வழக்கை  சென்னை உயர்நீதி மன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

தமிழகஅரசு, பொறியியல்  மாணவர்கள் மற்றும் கலை கல்லூரி மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும், அரியர் தேர்வுக்கு பணம் கட்டியவர்களின் தேர்வும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என அறிவித்தது.

ஆனால்,  பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து என்ற முடிவை ஏற்க முடியாது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறி வந்தார். இது தொடர்பாக  அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியது என்று தெரிவித்தார்.

ஆனால்,  இதற்கு அரசு தரப்பில்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏஐசிடிஇ  அதுபோன்ற எந்த கடிதத்தை யும் அனுப்பவில்லை என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறி வந்தார். இந்த நிலையில்,  அண்ணா பல்கலைக்கழக  துணைவேந்தர் சூரப்பா இன்று ஏஐசிடியின்  கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த பரபரப்பான நிலையில், அரியர் தேர்வு ரத்துக்கு எதிராக, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதுபோல,  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அரியர் தேர்ச்சிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

Post navigation

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம்: ஏஐசிடியின் கடிதம் வெளியானது…
3நாட்கள் மட்டுமே சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! அலுவல் ஆய்வு குழு முடிவு…

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer