சென்னை: தமிழகத்தில் சத்துணவு பணியாளர்களை தேர்வு செய்ய தேர்வுக்குழு அமைப்பு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சத்துணவு பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுக்குழுக்களை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தகுதிவாய்ந்தவர்களை தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.