டெல்லி: இந்தியாவில் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்துள்ளது.பலி எண்ணிக்கை 66 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்து, இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,357 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37, 69,523 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1045 பேர் இறந்துள்ளனர்.இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த உஎண்ணிக்கை 66,333 ஆக உயர்ந்தது.
கொரோனா பதிப்பில் இருந்து ஒரே நாளில் 62,026 பேர் குணமடைந்துள்ளனர்; இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 29,01,908 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,01,282 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் நேற்று மட்டும் 10,12,367 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 4.43 கோடி சளிமாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.