டெல்லி: தமிழகத்தைச் சோந்த பாரா ஒலிம்பிக் தடகள வீரா் மாரியப்பன் தங்கவேலு காணொளி காட்சி மூலம் குடியரசுத் தலைவரிடம் இருந்து கேல் ரத்னா விருது பெற்றார்.
விளையாட்டுத் துறை சிறந்த வீரர்களில் 5 பேருக்கு இந்த ஆண்டு, ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டது. அதில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவும் இடம்பெற்றிருந்தார்.
அவரருக்கு குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கி கௌரவித்தாா்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சோத்ததற்காக அவா் இந்த விருது வழங்கி கௌரவிக் கப்பட்டுள்ளாா். அதேபோல் தமிழகத்தைச் சோந்த பாரா தடக வீரா் ஜெ. ரஞ்சித் குமாருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தியான்சந்த் விருது வழங்கப்பட்டுள்ளது.
இவா்கள் தவிர 27 போ அா்ஜுனா விருது பெற்றனா். துரோணாச்சாா்யா விருது வாழ்நாள் சாதனையாளா் பிரிவில் 8 பேருக்கும், வழக்கமான பிரிவில் 5 பேருக்கும் வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனைக்காக தியான்சந்த் விருது வழங்கி 14 போ கௌரவிக்கப்பட்டனா்.
விளையாட்டுத் துறையின் வரலாற்றிலேயே முதல் முறையாக கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக இந்த ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சி காணொலி வழியே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.