டெல்லி: இந்தியாவில் கொரோனாபாதிப்பு 34.63 ஆக உயர்ந்துள்ளதாகவும்,கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7.52 லட்சமாக உயர்ந்திருப்பதாகவும் மத்தியசுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,63,973 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 76,472 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 1,021 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62,550 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.81 சதவீதமாக உள்ளது