இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் மும்பை சாந்தா குரூஸ் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் கடந்த சில நாட்களாக தங்கி இருந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சுஷாந்தை அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி தான் தற்கொலைக்கு தூண்டினார் என சுஷாந்த் தந்தை புகார் அளித்துள்ள நிலையில், ரியாவை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்திருந்தது.
அதன்படி நேற்று காலை 10.40 மணி அளவில் ரியா, சாந்தாகுரூஸ் விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஆஜரானார். இரவு 9.30 மணி வரை ரியாவிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 10 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.
‘’சுஷாந்த் குறித்து எனக்கு தெரிந்த அனைத்து விவரங்களையும் சி.பி.ஐ.அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டேன். சுஷாந்த் மரணத்தில் உள்ள உண்மையை மற்றவர்கள் போல் நானும் அறிய விரும்புகிறேன்’’ என ரியா தெரிவித்துள்ளார்.
-பா.பாரதி.