நாடு முழுவதும் கட்ந்த 24 மணி நேரத்தில் மேலும் 77,266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பாதிப்பாக கருதப்படுகிறது. அதுபோல, உலகிலேயே தினசரி பாதிப்புகளில் இந்தியா கடந்த சில நாட்களாக முதலிடத்திலும் இருந்து வருகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 77,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 87 ஆயிரத்து 501 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், கொரோனா பாதிப்பால் 7 லட்சத்து 42 ஆயிரத்து 023 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து 60,177 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 25 லட்சத்து 83 ஆயிரத்து 948 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 1,057 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61,529 ஆக உயர்வடைந்து உள்ளது .
நாடு முழுவதும் நேற்று மட்டும் 9,01,338 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை, 3,94,77,848 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை இந்திய மருத்துவ கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel